வாய்வழி உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்து!! -மிக விரைவில் அறிமுகம் செய்வுள்ள பைசர்-
வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரசை தடுக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தடுப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளனர்.
அந்த வகையில் பைசர் நிறுவனமும் கொரோனா தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், வாய்வழியாக உட்கொள்ளும் வகையிலான கொரோனா தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியையும் பைசர் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பைசர் நிறுவனத்தின் இயக்குனர் ஆல்பர்ட் போர்லா கூறியதாவது:-
நாங்கள் கொரோனாவுக்கு எதிராக இரு வகையான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சியை ஆரம்பித்துள்ளளோம். ஒன்று தடுப்பூசி, மற்றொன்று வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து.
குறிப்பாக வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தில் அதிக நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று நீங்கள் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டிலிருந்தே மருந்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஆண்டின் இறுதியில் வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்துகளை எதிர்பார்க்கலாம் என்றார்.