தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் நிரம்பியுள்ளது..! அடுத்தகட்டம் என்ன செய்வது? தாதியர் சங்கம் கேள்வி..
தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள படுக்கைகள் நிரம்பியிருக்கும் நிலையில் எதிர்வரும் நாட்களில் நோயாளர்களை எங்கே அனுமதிப்பது? என இலங்கை தாதிமார் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து சங்கம் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகளிற்கான தேவை அதிகரித்துள்ளது.
என சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடிக்கு உடனடியாக தீர்வை காணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர்,
அரசாங்கம் தீவிரகிசிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகளை அனுமதித்துள்ளதாக தெரிவித்தாலும் 18 படுக்கைகள் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் நாளாந்தம் 900 கொரோனாவைரஸ் நோயாளர்கள் அனுமதிக்கப்படுகின்றபோதிலும் தீவிரகிசிச்சை பிரிவுகளில் 193 கட்டில்கள் மாத்திரமே காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மோசமடைந்து வரும் நிலையை கருத்தில்கொள்ளும் தீவிரகிசிச்சை பிரிவுகளில் தற்போது காணப்படும் நிலைமை போதுமானதல்ல என குறிப்பிட்டுள்ள அவர்
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் எதிர்காலத்தில் கொரோனாவைரசினால் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை எங்கு அனுமதிக்கப்போகின்றீர்கள் என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.