SuperTopAds

குப்புறப்படுத்துக்கொண்டால் கொரோனாவில் இருந்து மீளலாம்!!

ஆசிரியர் - Editor II
குப்புறப்படுத்துக்கொண்டால் கொரோனாவில் இருந்து மீளலாம்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் தத்தமது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள், குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்பற்றும்போது, சுவாசப்பாதை விரிவடைந்து, சுவாசம் மேம்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி, முகமும், வயிற்றுப்பகுதியும் கீழ்புறமாக இருக்கும்படி படுத்துக்கொண்டு, தலைக்கு ஒரு தலையணையும், மார்பு பகுதியில் இரண்டு தலையணைகளும், முழங்காலுக்கும் பாதத்திற்கும் இடைப்பட்ட முன்புற கால்பகுதியில் ஒரு தலையணையும் வைத்து படுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒட்சிசன் அளவு 94 சதவீதத்திற்கும் குறைவாகும் போது மட்டுமே இந்த முறையில் படுக்க வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணிகள், இதயபாதிப்பு, முதுகுதண்டுவட பாதிப்பு, உள்ளவர்கள் இவ்வாறு படுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.