பூநகரி கடற்றொழிலாளர்கள் கவலை.

கிளிநொச்சி பூநகரிக் கடற்பிரதேசத்தில் வெளிமாவட்ட மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளால் தமது கடற்தொழில்கள் முழுமையாகப்பாதிக்கப்படுவதாக பூநகரிப் பிரதேச கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரிப்பிரதேச பாலைதீவு இரணைதீவு வலைப்பாடு கற்கடதீவு, மூன்றாம் பிட்டி, ஆகிய ஆழ்கடல் பகுதிகளில் வெளிமாவட்டங்களைச்சேர்ந்த சிலிண்டர்கள் பாவிக்கப்பட்ட சட்டவிரோதத்தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் தமதுதொழில்கள் முழுமையாகப்பாதிக்கப்பட்டிருப்பதாக இப் பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, நாளொன்றுக்கு முற்பது வரையான நண்டு வலைகளை கடலில் விடுகின்ற போது வலைகளல் சிக்குகின்ற நண்டைககூட சிலிண்டர் பாவித்து சட்டவிரோத தொழில்களில்ஈடுபடுவோர் வெட்டிச்செல்கின்றனர்.
இதைவிட, ஒவ்வொரு தொழிலாளியும் நாளொன்றுக்கு இரண்டு கிலோ நண்டைக்கூட பிடிக்க முடியாதளவில் நண்டுத்தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள கடற்தொழிலாளர்கள் நண்டுக்கான சந்தை வாய்ப்பு உள்ளபோதும், இவ்வாறு தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பல்வேறு தரப்புக்களிடமும் முறையிட்டபோதும் இதுவரை எந்தவிதமான தீர்வும் கிடைக்;கவில்லை எனவும் தமது தொழில்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேற்படி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.