இலங்கைக்குள் நுழைந்துள்ள யுரேனியம் நிரப்பபட்ட கப்பலால் புதிய சர்ச்சை..! உடனடியாக வெளியேறுமாறு அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை விடாப்பிடி..
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வந்துள்ள சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் நிரப்பபட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல்.அனில் ரஞ்சித், அனுமதி பெறாமல் இவை நாட்டுக்குள் வரக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அவ்வாறு அனுமதி வழங்கப்படும் போது, குறித்த இரசாயன பொருள் என்ன, அது எந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படும். எனினும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு
எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வௌியேற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், குறித்த கப்பல் துறைமுகத்திற்கு வௌியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக
கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். நெதர்லாந்தின் Rotterdam-இல் இருந்து சீனா நோக்கி பயணிக்கும் குறித்த கப்பலில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக , கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.