SuperTopAds

தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மிக கெட்டவார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தினார்..! நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா அதிபரிடம் புகார்..

ஆசிரியர் - Editor I
தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மிக கெட்டவார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தினார்..! நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா அதிபரிடம் புகார்..

போர்ட் சிட்டி திட்டத்திற்கு எதிராக கருத்தக்களை வெளியிட்ட காரணத்தினால் தொலைபேசியில் தம்மை தொடர்பு கொண்டிருந்த ஜனாதிபத கோட்டபாய ராஜபக்ஸ அச்சுறுத்தல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் விசேட ஊடக சந்திப்பை நடத்தி அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.போர்ட் சிட்டி திட்டத்தின் ஊடாக அமைக்கப்படும் ஆணைக்குழுவினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதுபோல 

சீனக் கொலணியாகவே இலங்கை மாற்றமடையும் என்று தெரிவித்தமைக்காக ஆத்திரங்கொண்ட ஜனாதிபதி, நாட்டின் தலைவராக இல்லாமல் தன்னை கெட்டவார்த்தையினால் விமர்சித்ததாகவும் விஜேதாஸ ராஜபக்ஷ கூறினார்.அதன் காரணமாக பொலிஸ்மா அதிபரிடம் 

தாம் தனது உயிர் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக முறையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.