இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை..! புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமோகம்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை..! புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமோகம்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 700ஐ கடந்துள்ளது. 

இன்று புதன்கிழமை இரவு 8 மணி வரை 99 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 95 719 ஆக உயர்வடைந்துள்ளது. 

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 92 151 பேர் குணமடைந்துள்ளதோடு , 2966 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் மரணங்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகின.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு