ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஹிட்லர்போல் ஆட்சி செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்களாம்..! அமைச்சரின் கருத்தால் சர்ச்சை..
சர்வாதிகாரி ஹிட்லர் போன்று செயற்படவேண்டும் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்கு வாக்களித்தார்கள். என இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம கூறியிருக்கும் கருத்தினால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இவ்வாறு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர் என அவர் கூறினார். ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால்
எவரும் குறைகூறமாட்டார்கள் குற்றம்சாட்டமாட்டர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செயற்படவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.