14 உயிர்களை பலியெடுத்த கோர விபத்து..! சாரதிக்கு சாரதி அனுமதி பத்திரமே இல்லையாம், பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சி..

ஆசிரியர் - Editor I
14 உயிர்களை பலியெடுத்த கோர விபத்து..! சாரதிக்கு சாரதி அனுமதி பத்திரமே இல்லையாம், பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சி..

14 உயிர்களை பலியெடுத்த பதுளை - பசறை விபத்தில் பேருந்தை ஓட்டிய சாரதிக்கு சாரதி அனுமதி பத்திரமே இல்லை. என விசாரணைகள் மூலம் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன் அவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

இந்நிலையில் குறித்த சாரதி, பஸ் அட்டவணையை பின்பற்றாத நிலையில் செயல்பட்டமை, பொறுப்பற்ற நிலையில் பஸ்ஸை கடும் வேகத்தில் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியிருந்தார்.

இதன்போது அந்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், மேலுமொரு மோசடி குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.குறித்த பஸ் சாரதி, பிறிதொரு சாரதியின் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தியே, 

விபத்துக்குள்ளான பஸ்ஸை செலுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.அத்துடன், அவர் பிறிதொருவரின் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, நீண்ட காலமாக சாரதியாக செயல்பட்டு வந்தமை குறித்த தகவல்களும், வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வருகின்றன. அத்துடன் குறித்த சாரதிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை, முன்னெடுக்கவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, 

பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.மேற்படி பசறை விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio