இலங்கை அரசை இனியும் நம்பவேண்டாம்! VIDEO

ஆசிரியர் - Editor I
இலங்கை அரசை இனியும் நம்பவேண்டாம்! VIDEO

இலங்கை அரசாங்கத்தை இனிமேலும் நம்பாமல் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதி பொறிமுறைக்கு முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். என கூறியிருக்கும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் 10ம் ஆண் டு நினைவு நாளில் தமிழ் மக்கள் நீதி பொறிமுறையை காணவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எம்.கே.சிவாஜிலிங்கம் மே ற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஐ.நா மனித உரிமைக ள் ஆணையகம் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கியதெல்லாம் போதும். இனியும்

கால அவகாசத்தை வழங்க கூடாது. அதேபோல் இலங்கை அரசாங்கத்தை நம்பவும் கூடா து. ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தில் ஒரு வருடம் நிறைவடைந்திருக்கும் நிலை யில், இலங்கை இப்போதுதான் அவசர அவசரமாக காணாமல்போனவர்கள் அலுவலகம் ஒன் றை உருவாக்கி கொண்டிருக்கின்றது. ஆகவே இலங்கை அரசாங்கத்தை இனியும் நம்புவதால்

பயன் ஒன்றும் இல்லை. முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளை இன்னும் இரண்டு மாதங்களி ல் தமிழ் மக்கள் நினைவுகூரவுள்ளார்கள். இதேபோல் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10ம் ஆண்டு நினைவு நாளை தமிழ் மக்கள் நினைவுகூரும்போது இலங்கை அரசாங்கம் ஒரு சர்வ தேச நீதி பொறிமுறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவேண்டும. எனவும் சிவாஜிலிங்கம் கூறினார். 

மாவை சேனாதிராஜா கூறிய கருத்து தொடர்பாக. 

நுடைபெற்று  முடிந்திருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அi டந்துள்ள பின்னடைவுக்கு வடமாகாணசபை காரணம் என மாவை சோ.சேனாதிராஜா கூறியி ருந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சி வாஜிலிங்கம், அரசுக்கு ஆதரவு வழங்கியமையாலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு பின்னடை 

வை சந்தித்துள்ளது. என கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் கூறியுள்ளார். இந்நிலையில் மா வை சேனாதிராஜா கூறும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்N னஷ்வரன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு முயற்சித்தமையாலேயே தமி ழ்தேசிய கூட்டமைப்பு தேர்தலில் பின்னடைவை சந்தித்தது என்றார். 

முல்லைத்தீவு சிங்கள குடியேற்ற முயற்சி தொடர்பாக. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்க மேற்கொள்ளப்ப டும் முயற்சி தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றமை தொடர்பாக அறிந்து கொண்டேன். இதற்கு எதிராக மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் இணைந்து பாரியளவில் அரசு

க்கு அழுத்தம் கொடுப்பதற்கான போராட்டத்தை நடத்தவேண்டும். மேலும் வடமாகாண கா ணி அமைச்சர் என்றவகையில் முதலமைச்சரும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டு ம் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு