சுகாதார பிரிவினர் நடத்திய திடீர் சோதனை..! 10 மாணவர்களுக்கும், 10 ஆசிரியர்களுக்கும் தொற்று, சுகாதார நடைமுறைகளை மதிக்காத அதிபருக்கு எச்சரிக்கை...

ஆசிரியர் - Editor I
சுகாதார பிரிவினர் நடத்திய திடீர் சோதனை..! 10 மாணவர்களுக்கும், 10 ஆசிரியர்களுக்கும் தொற்று, சுகாதார நடைமுறைகளை மதிக்காத அதிபருக்கு எச்சரிக்கை...

10 பாடசாலை மாணவர்களுக்கும் 10 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பாடசாலையில் சுகாதார நடைமுறைகளை மதிக்காமை தொடர்பாக அதிபரை சுகாதார பிரிவினர் கடுமையாக எச்சரித்துள்ளனர். 

குறித்த சம்பவம் கொட்டகலை தமிழ் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் திம்புல பொலிஸார் சகிதம் சென்ற கொட்டகல சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் பாடசாலையை அவசர பரிசோதனைக்கு உட்படுத்தினர். 

இதன்போது 10 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளமை தெரியவந்தது. பாடசாலைக்கு மாணவர்கள் தினமும் வருகை தரும்போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றா மல் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படுவதாகவும் 

இதனால் சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறும் பாடசாலை அதிபருக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கடுமையாக அறிவுறுத்தப்பட்டது.

Radio