உலக சந்தையில் 604 டொலராக உயர்ந்த சமையல் எரிவாயு விலை..! இலங்கையில் 2148 ரூபாயாக அதிகரிப்பதுடன், தட்டுப்பாடு உருவாகும் என எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
உலக சந்தையில் 604 டொலராக உயர்ந்த சமையல் எரிவாயு விலை..! இலங்கையில் 2148 ரூபாயாக அதிகரிப்பதுடன், தட்டுப்பாடு உருவாகும் என எச்சரிக்கை..

இலங்கையில் மிக விரைவில் சமையல் எரிவாயு சிலின்டருக்கு தட்டுப்பாடு உருவாகும். என தொியவருகிறது. இந்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் 

மக்கள் கடுமையான எரிவாயு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 2019 இல் 440 அமெரிக்க டொலராக இருந்த எரிவாயுவின் விலை 

பிப்ரவரி மாத இறுதியில் உலக சந்தையில் 604 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.எனவே 12.5 கிலோ எரிவாயுக்கு 770 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு சிலிண்டரின் தற்போதைய விலையை ரூ .1,493 ஆகும். எனினும் இதை 2,148 ஆக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எரிவாயு நிறுவனங்கள் கோரியதற்கு 

அரசாங்கம் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் விலை அதிகரிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு