க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பிற்போடப்பட்டமைக்கு காரணம் என்ன? பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுக்க தகவல்..

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பிற்போடப்பட்டமைக்கு காரணம் என்ன? பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுக்க தகவல்..

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன ஆகஸ்ட் மாதம் நடத்தப்படாது என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறித்த இரு பரீட்சைகளையும் பிறிதொரு நேரத்தில் நடத்த கல்வி அமைச்சர், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடனான 

கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக மேலதிக விவாதங்கள் மற்றும் கலந்துரையடல்களையும் கல்வி அமைச்சகம் நடத்த உள்ளதாக 

பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.கொவிட் பரவல் காரணமாக பாடசாலைகளில் முறையான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதமையினாலும், 

அதனால் பாடத்திட்டங்கள் உரிய வகையில் பூர்த்தி செய்யப்படாமையே இதற்கான காரணம் என்றும் அவர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு