SuperTopAds

இலங்கையின் தேசிய கொடியை அவமரியாதை செய்யும் கால் துடைப்பான் விவகாரம்..! வெளிவிவகார அமைச்சு விடாப்பிடி..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் தேசிய கொடியை அவமரியாதை செய்யும் கால் துடைப்பான் விவகாரம்..! வெளிவிவகார அமைச்சு விடாப்பிடி..

இலங்கையின் தேசிய கொடியை அவமரியாதை செய்யும் வகையிலான கால்மிதி மற்றும் பாதணிகள் தயாரிப்பு தொடர்பில் சீனாவில் உள்ள உற்பத்தியாளர் மற்றும் அமொிக்காவில் உள்ள விற்பனையாளரை தொடர்புகொள்ள வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தேசிய கொடி அச்சிடப்பட்ட பாதணி மற்றும் கால்துடைப்பான் விரிப்புகள் அமேசான் ஒன்லைன் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகம் சீனாவின் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தை அணுகியுள்ளது.

சீனாவை தளமாகக் கொண்ட வீட்டு வாசல்களின் கால்துடைப்பம் உற்பத்தியாளரை தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்துள்ளார். 

இலங்கையின் தேசியக் கொடியை வீட்டு கால்துடைப்பமாக விளம்பரம் செய்வது குறித்து வெளியுறவு செயலாளர் இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் வோஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் அமேசானுடன் இந்த விஷயத்தைப் பின்தொடருமாறு அறிவுறுத்தியுள்ளார்.