SuperTopAds

இலங்கையில் சமையல் எரிவாயு சிலின்டர்களுக்கு (ஹஸ் சிலின்டர்) தட்டுப்பாடு ஏற்படலாம் என தகவல்..!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் சமையல் எரிவாயு சிலின்டர்களுக்கு (ஹஸ் சிலின்டர்) தட்டுப்பாடு ஏற்படலாம் என தகவல்..!

இலங்கையில் சமையல் எரிவாயு (ஹஸ் சிலின்டர்) சிலின்டருக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சர்வதேச அளவில் எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு சிலிண்டருக்கு 750 ரூபா வரை நட்டம் ஏற்பட்டு வருவதாக கேஸ் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.

இருந்த போதிலும் சிலிண்டர்களின் விலைகளை 650 ரூபாவரை அதிகரிக்க கேஸ் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அந்தக் கோரிக்கைக்கு இதுவரை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடமிருந்து உரிய பதில் அளிக்கப்படாத காரணத்தினால் 

உற்பத்திகளை குறைக்க கேஸ் நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.