தென்னாபிரிக்காவில் பரவும் புதியவகை கொரோனா தொற்றுடன் இலங்கையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!
தென்னாபிரிக்காவில் தற்போது தீவிரமாக பரவிவரும் புதிய வீரியம் கூடிய கொரோனா வைரஸ் தொற்றுடன் நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட உருமாறிய கொவிட்−19 (B.1.351) என்ற புதிய வைரஸ் வகையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார். தன்ஸானியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து,
தற்போது தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.