SuperTopAds

5 பெண்கள் மீது பலாத்காரம்..! வெளிநாட்டு நீதிமன்றில் இலங்கையர் மீது 18 குற்றச்சாட்டுக்களுக்கு தண்டணை..

ஆசிரியர் - Editor I
5 பெண்கள் மீது பலாத்காரம்..! வெளிநாட்டு நீதிமன்றில் இலங்கையர் மீது 18 குற்றச்சாட்டுக்களுக்கு தண்டணை..

வாடகை வாகன சாரதியாக தன்னை அடையாளப்படுத்தி 5 பெண்களை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் புரிந்த இலங்கையருக்கு 18 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 3 வருடங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. 

44 வயதான சம்பத் சமரநாயக்க என்பவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2018) பிரிஸ்பேனின் இரவு விடுதியொன்றில் தன்னை, டெக்ஸி வாகன சாரதியாக போலியாக அடையாளம் காட்டி, 

ஐந்து பெண்களை அழைத்துச் சென்றுள்ளதுடன், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.அவர் மீது பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைகள், 

சுதந்திரத்தை பறித்தல், அநாகரீகமான செயல்கள் மற்றும் பொதுவான தாக்குதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.இந் நிலையில் வியாழக்கிழமை 18 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனக் கண்டறிய 

நடுவர் மன்றம் மூன்று மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தை எடுத்தது.