பூநகரியில் இறால் அறுவடை…!

பூநகரி பரமன்கிராயில் இறால் அறுவடை நேற்றுமுன்தினம் (18-03-20418) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு ஆனி மாதம் பூநகரி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தினால் ஐ.எல்.ஓ. நிறுவனத்தின் நிதி உதவியுடன் பரமன்கிராய் கடற்றொழிலாளர் சங்கத்தினால் ஒரு ஏக்கரில் வளர்க்கப்பட்ட இறால் அறுவடை செய்யப்பட்டது.
பூநகரி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் யோசப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் ச.கிருஷ்ணேந்திரன், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், ஐ.எல்.ஓ நிறுவன அதிகாரிகள், கடற்றொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்