தற்காலிக மலசலகூடம் அமைத்ததற்காக கூலி தொழிலாளி மீது தாக்குதல்..! தொடரும் அடிமைத்தனம்..

ஆசிரியர் - Editor I
தற்காலிக மலசலகூடம் அமைத்ததற்காக கூலி தொழிலாளி மீது தாக்குதல்..! தொடரும் அடிமைத்தனம்..

தற்காலிக மலசலகூடம் கட்டியதற்காக 4 பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் பதுளை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக தமக்கான பிரத்தியேக மலசலகூடமொன்றை அமைத்து தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரியுள்ளார். 

எனினும் நீண்ட நாட்களாகியும் அமைத்துக் கொடுக்கப்படாதமையால் அவர் தற்காலிகமாக மலசலகூடமொன்றை அமைத்துள்ளார்.

தமக்கு அறிவிக்காமல் இவ்வாறு மலசலகூடம் அமைத்தமை தவறெனக் கூறி இதனை உடனடியாக அகற்றுமாறு தோட்ட முகாமையாளர் உத்தரவிட்டுள்ளார். 

இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

அத்தியாவசிய தேவையான மலசலகூடத்தை அமைத்தமைக்காக இவ்வாறு தொழிலாளியொருவர் தாக்கப்படுவது கவலைக்குரியதாகும் என்றும் , 

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தொழிற்சங்கங்கள் ஊடாக தீர்வை பெற எதிர்பார்த்துள்ளதாகவும் தொழிலாளர்கள் சார்பில் பிரதிநிதியொருவர் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு