பதுளை வைத்தியசாலையில் 31 பேருக்கு கொரோனா! - புற்றுநோய் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது.

ஆசிரியர் - Admin
பதுளை வைத்தியசாலையில் 31 பேருக்கு கொரோனா! - புற்றுநோய் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது.

பதுளை பொது வைத்தியசாலையில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.

பதுளை பொது வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியொருவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

அதன் பின்னர் வைத்தியசாலையின் இரு ஊழியர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை நேற்றைய தினம் கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் இன்றைய தினம் புற்றுநோய் பிரிவில் வைத்தியர், நோயாளிகள் மற்றும் நோயாளர்களை பராமரிப்பவர்கள் உள்ளடங்கலாக 29 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு இன்று தற்காலிகமாக மூடப்பட்டது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Radio