SuperTopAds

இரு நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்ட இருவர் மரணம்..! தீவிர விசாரணையில் சுகாதார அமைச்சு..

ஆசிரியர் - Editor I
இரு நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்ட இருவர் மரணம்..! தீவிர விசாரணையில் சுகாதார அமைச்சு..

இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்ட இருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.

மேலும் இது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சுகாதார அமைச்சு தொிவித்திருக்கின்றது. 

தடுப்பூசியை பயன்படுத்திய இருவர் இரண்டுநாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார சேவை பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் 

தடுப்பூசியை பயன்படுத்தியதன் காரணமாகவா அவர்கள் உயிரிழந்தனர் என்பது குறித்துஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களிற்கு முன்னர் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஒருவர் திவுலுப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.