மோட்டார் சைக்கிளை திருடி அதே மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சங்கிலி அறுத்தவர் சிக்கினார்..! நகைகள், மோட்டார் சைக்கிள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளை திருடி அதே மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சங்கிலி அறுத்தவர் சிக்கினார்..! நகைகள், மோட்டார் சைக்கிள் மீட்பு..

மோட்டார் சைக்கிளை திருடி அதே மோட்டார் சைக்கிளில் திரிந்து சங்கிலி அறுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மஹரகம பொலிஸாரால் 44 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பன்னிப்பிட்டிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசங்களில் வசிப்பவராவார். 

மீகொட பொலிஸ் பிரிவில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் பொரல்லஸ்கமுவ, பிலியந்தல, பமுனுகம, 

அத்துருகிரிய மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் தங்க சங்கிலிகள் கொள்ளையிடப்பட்ட 10 சம்பவங்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது. இதன் போது கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அண்மை காலமாக வீதிகளில் சென்று கொண்டிருப்பவர்களின் தங்க சங்கிலிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவை கொள்ளையடிக்கப்படுகின்றமை அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் பாவனையாளர்களாலேயே 

இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரும் போதைப்பொருள் பாவனையாளராவார். மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறிருப்பினும் மோட்டார் சைக்கிள்களை தரித்து நிறுத்தும் போது மிகவும் பாதுகாப்பாக இடங்களில் நிறுத்துமாறும், தங்க ஆபரணங்கள் அணிந்து செல்லும் பெண்கள் இரவு வேளைகளில் தனி பாதைகளில் செல்வதைத் தவிர்த்து 

சன நடமாட்டமுள்ள பாதைகளில் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு