காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளை தேடிய 84 பேர் இதுவரை உயிரிழந்த சோகம்..! இறுதிவரை விடை கிடைக்காமல்..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளை தேடிய 84 பேர் இதுவரை உயிரிழந்த சோகம்..! இறுதிவரை விடை கிடைக்காமல்..

காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை தேடி அலைந்த 84 பேர் இதுவரை வடகிழக்கு மாகாணங்களில் உயிரிழந்துள்ளனர். 

வடக்குக் கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், தமது பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்திப் 

பல்வேறு போராட்டங்களை நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடியலைந்து 

துயரங்களைச் சுமந்து வயோதிய ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றார்கள். 

இவ்வாறு தமது உறவுகளைத் தேடியலைந்த 84 உறவுகள் நோய் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 10 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக 

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து 

தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தமது விடயங்களில் தலையிட்டு தீர்வுகளைப் பெற்றுத் தருமாறுகோரி 

உறவுகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio