பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க தயாரிக்கப்பட்ட அப்பியாச கொப்பிகளை விற்பனை செய்தவர் கைது..!
நீர்கொழும்பு நகரசபையினால் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அப்பியாச கொப்பிகளில் 298 அப்பியாச கொப்பிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி தகவலை பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக நீர்கொழும்பு நகரசபை ஊடாக ,
நகரசபையின் பெயர் பதிக்கப்பட்ட அப்பியாசப் புத்தகங்கள் தயார் படுத்தப்பட்டிருந்தன. இந்த அப்பியாச புத்தகங்களில் ஒருத்தொகை நீர்கொழும்பு பகுதியில் அமைந்துள்ள புத்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுத்தொடர்பில் கவனம் செலுத்திய நீர்கொழும்பு பொலிஸார் , புத்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 298 அப்பியாச புத்தகங்களை கைப்பற்றயுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து புத்தக நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் நகரசபை உறுப்பினர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வாக்கு மூலம் வழங்கியுள்ளதுடன், இந்த அப்பியாச புத்தகங்களை
விற்பனை நிலையத்திற்கு வழங்கிய நபர்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.