ஆரம்பத்திலேயே கைகழுவியது பிரிட்டன்..! ஏமாற்றத்தில் தமிழர் தரப்பு, அடுத்து நடக்கப்போவது என்ன?
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கான புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கப்போவதாக ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பிரிட்டன் விடுத்துள்ள அறிவிப்பு தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைகத்தன் 46வது கூட்டத்தொடர் இணைய வாயிலாக இன்று ஆரம்பமானது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் நாளை விவாதிக்கப்படவுள்ள நிலையில்,
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான புதிய தீர்மானத்தை முன்வைப்போம் என ஐ.நா.மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் இன்று முன்வைத்த பொதுவான அறிக்கையில் அறிவித்துள்ளது.
இலங்கை விவகாரத்தை மனித உரிமைகள் சபைக்கு அப்பால் பொறுப்புக்கூறும் அமைப்பு ஒன்றிடம் கையளிக்க தமிழ் மக்கள் சார்பில் கோரப்பட்ட நிலையில் பிரிட்டனின் இந்த அறிவிப்பு ஏமாற்றை ஏற்படுத்தியுள்ளது.