நேரடி அரசியலில் ஈடுபட இணங்கினார் ஜனாதிபதி!

ஆசிரியர் - Admin
நேரடி அரசியலில் ஈடுபட இணங்கினார் ஜனாதிபதி!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுமாறு பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ள நிலையில் அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பங்காளிக்கட்சிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனதிபதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், கொவிட் -19 தடுப்பு வேலைத்திட்டங்களை அரசாங்கம் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பங்காளிக் கட்சிகள் ஏற்படுத்திக்கொண்டுள்ள முர்ணபாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈடுபட்டு அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபஅமைச்சர் விமல் வீரவன்ச தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒரு சில உறுப்பினர்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில் அதற்கான காரணத்தையும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளது, ஆனால் நாட்டின் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் உள்ளது. எனவே ஜனாதிபதி அரசியல் செயற்பாடுகளில் வேண்டும். அதுவே அரசியல் ரீதியில் அரசாங்கத்தை பாதுகாக்கவும் சாதகமாக அமையும் என்பதையும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தை எடுத்துக்கொள்வதா அல்லது மாற்று வழிமுறையை கையாள்வதா என்பது குறித்து தெளிவான நிலைப்பாடு எதனையும் பங்காளிக்கட்சிகள் தெரிவிக்காதுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி நேரடியான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும், அவரது தலைமைத்துவத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை பங்காளிக்கட்சிகள் முன்னெடுக்கும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Radio