யாழ்.சுழிபுரம் மீனவர்களின் மீன்படி வலைகளை அறுத்து இந்திய இழுவை படகுகள் அட்டூழியம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரம் மீனவர்களின் மீன்படி வலைகளை அறுத்து இந்திய இழுவை படகுகள் அட்டூழியம்..!

யாழ்.சுழிபுரம் கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இந்திய இழுவை படகுகளால் நாசம் செய்யப்பட்டிருப்பதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கையில், நாங்கள் எமது கரையில் இருந்து 5 கி.மீ எல்லைக்குள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்திய இழுவைப் படகுகள் எங்களது வலைகளை அடித்துச் சென்றுள்ளது.

இந்திய இழுவைப் படகுகள் உள்ளே நுழைந்ததை அவதானித்த நாங்கள் எமது வலைகள் கடலில் உள்ளது எனவே இழுவைப் படகுகளில் அகப்பட்டால் வலைகள் நாசமாகிவிடும் என்று கூறினோம். அதற்கு அவர்கள் எம்மை தகாத வார்த்தைகளால் திட்டிச் சென்றுள்ளனர். 

இழுவைப் படகுகளை கண்டவுடன் எமது மீனவர்கள் பலர் தமது வலைகளை படகில் ஏற்றியதால் அவர்களது வலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளோம்.

கடந்த சில வாரங்களாக இழுவைப் படகுகள் வந்து எமது தொழில் முதல்களை அழித்துள்ளன ஆனாலும் நேற்று இரவு வந்ததைப் போல அதிகமான இழுவைப் படகுகள் ஒருநாளும் வந்ததில்லை. நாங்கள் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் 

கடன்களைப் பெற்று தான் தொழில் முதல்களை கொள்வனவு செய்து தொழில் செய்கின்றோம். பெற்ற கடன் கூட செலுத்தி முடிக்கப்படாத நிலையில் இப்படியான செயற்பாடுகள் இடம்பெறுவதனால் கடன்களை மீளச் செலுத்த முடியாத 

சந்தர்ப்பத்தில் நாங்கள் தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுவோமா என்று சிந்திக்க தோன்றுகிறது என்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு