தன் இரு குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு தானும் நஞ்சருந்திய நிலையில் வீதியில் இறந்துகிடந்த தாய்..! குழந்தைகளும் உயிரிழந்த சோகம்..

ஆசிரியர் - Editor I

தனது இரு குழந்தைகளுக்கு நஞ்சு கொத்துவிட்டு தானும் நஞ்சருந்தி வீதியில் விழுந்து கிடந்த தாய் மற்றும் குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவம் தம்புள்ள -யாபாகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறின் விளைவாகவே, குறித்த தாய் தனது ஒன்று மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார். 

இந்நிலையில், தாயும் இரண்டு குழந்தைகளும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதான வீதியோரத்தில் இவர்கள் கீழே விழுந்த நிலையில் காணப்பட்டபோது 

பிரதேச வாசிகள் கண்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்மேலும், இரு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், குறித்த யுவதியின் கணவன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தொழில் செய்பவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

Radio