தனிமைப்படுத்தப்பட்ட வீட்டுக்குள் நுழைந்து பெண்ணுடன் தகாதமுறையில் நடக்க முயன்ற பொலிஸ் அதிகாரி மாட்டினார்..!

ஆசிரியர் - Editor I

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டுக்குள் நுழைந்து இளம் பெண்ணுடன் தகாதமுறையில் நடந்துகொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் 53 வயதான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதுடன், 

பணி இடைநிறுத்தம் மட்டுமல்ல கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என கண்டி பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்க கூறியுள்ளார். இது குறித்து மேலும் தொியவருவதாவது, 

53 வயதான குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கண்டி தலவத்து ஓயா பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்த குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் வீட்டை சரிபார்க்கபோவதாக கூறி பெண்ணுடன் தகாதமுறையில் 

நடக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்கள் ஊடாக கண்ட பிரதேச மூத்த பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். இதனையடுத்து பொலிஸ் அதிகாரி பணி இடை நிறுத்தப்பட்டுள்ளார். 

Radio