டக்ளஸ் - அங்கஜன் அடிபிடியால் வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவைகள் முடக்கம்..! பலர் பாதிப்பு..
டக்ளஸ் - அங்கஜன் இடையிலான போட்டியினால் புதிதாக நியமனம் செய்யப்பட்ட இ.போ.ச வடபிராந்தி முகாமையாளர் நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து இ.போ.ச பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் குதித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குனபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் இ.போ.ச தொழிற்சங்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன.
வடபிராந்தியத்தில் குறைந்தளவானோரைக் கொண்ட கட்சி ஒன்றின் நடவடிக்கையால் பிராந்திய முகாமையாளர் நியமனம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த செல்லத்துரை குணபாலச்செல்வம், இலங்கை போக்குவரத்துச் சபையில் நீண்ட கால சேவை புரியும் அனுபவமிக்கவர். கடந்த ஆட்சியில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட
எதிர்ப்பு நடவடிக்கையால் அவர் யாழ்ப்பாணம் சாலை முகாமையாளர் பதவியிலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டார்.
மும்மொழித் திறமையுடைய அவர், கடந்த காலங்களில் பல ஊழியர்களின் பதவிநிலை பிரச்சினைகளை சீர் செய்து வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வம், வடபிராந்திய பிரதான முகாமையாளராக கடந்த வெள்ளிகிழமை நியமனம் செய்யப்பட்டு நியமன கடிதத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.
இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வத்தின் நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனை தடுத்தே தீருவேன். என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் , தொழிற்சங்கத்துக்கு உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
அதனால் வடபிராந்தியத்தின் 7 சாலைகளினதும் தொழிற்சங்கள் நேற்று காலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்து எஸ்.குணபாலச்செல்வத்தின் நியமனத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர்.
அவரது நியமனத்தை நிறுத்தினால் வடபிராந்தியத்தின் 7 சாலைகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.
எனினும் நியமனம் நிறுத்தப்படாது என உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பணிப்புறப்பணிப்பில் ஈடுபட அவசியம் ஏற்படாது என்று குறிப்பிட்டிருந்தார்.