யாழ்.தையிட்டியில் பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..! தனியார் காணியையும் உள்ளடக்கி..

ஆசிரியர் - Editor I

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் ஒரு பகுதியையும் எடுத்து “திஸ்ஸ விகாரை” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 

100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் 

நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.

தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைக்கப்படவுள்ளது.அந்தக் காணி திஸ்ஸ விகாரைக்குரிய காணி என தெரிவிக்கப்பட்ட போதும் அதனுடன் இணைந்து தனியார் காணிகள் விடுவிக்கப்படாமல் 

பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதேவேளை நேற்றய தினம் குறித்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்படுவதாக தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதுடன், 

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்படவேண்டும். எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்ககதாகும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு