வடமாகாணம் முழுவதும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I

வடமாகாணம் முழுவதும் இன்று காலை 8.30 மணி தொடக்கம் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகி நடந்துவருகிறது.

இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய கொவிட்-19 தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை நேற்றய தினம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் காலை 8.30 மணி தொடக்கம் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.

அந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து 3 நாட்களுக்கு வழங்கப்படவுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரச மருத்துவமனைகளில் இந்த பணி 

மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இன்றைய தினம் மாகாண சுகாதார பணிப்பாளீ ஆ.கேதீஸ்வரன், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திமூர்த்தி

உள்ளிட்ட உயர் சுகாதார அதிகாரிகள் முன்மாதிரியாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு