வடமாகாணதின் 5 மாவட்டங்களிலும் கொவிட்19 தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை ஆரம்பம்..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொவிட்19 தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.
5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தெரிவித்தார்.யாழ்.மாவட்டத்துக்கு 5 ஆயிரத்து 820 டோஸ்களும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஆயிரத்து 160 டோஸ்களும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஆயிரத்து 300 டோஸ்களும், வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்களும்,
மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரத்து 800 டோஸ்களும் கோரப்பட்டன. அதன் முழுமையான தொகை டோஸ்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கும் கோரப்பட்டன.
எனினும் அது தனியான திட்டத்தின் ஊடாக வழங்கப்படுமென சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.