யாழ்.மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 

26 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக 3 வாக்குகளும் வழங்கப்பட்டன. 15 பேர் நடுநிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் ஆனல்ட் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தற்போதைய ஆட்சி 2021ஆம் ஆண்டில் நீடிக்கும்.முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் சமர்ப்பித்த 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு 

இரண்மு முறை தோல்வியடைந்திருந்தது. அதனால் அவர் பதவியிழந்தால் டிசெம்பர் 30ஆம் திகதி நடத்தப்பட தெரிவில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முதல்வராகத் தெரிவானார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையில் மொத்தமாக 45 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் . அதில்கூட்டமைப்பு -16,முன்னணியின் மணிவண்ணன் அணி -10, 

ஈபிடிபி -10 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3, ஐக்கிய தேசியக் கட்சி -3, சிறிலங்கா சுதந்திரக் கட்சி -2, தமிழர் விடுதலைக் கூட்டணி -1 என்கிற அடிப்படியில் உறுப்புரிமை கொண்டுள்ளார்கள். 

இன்றைய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் நடுநிலை வகித்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள் எதிராகவும் 

10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, 

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு