கடுமையான இராணுவ நெருக்கடிகளை தாண்டி குருந்துார் மாலைக்கு சென்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினர்..! தெளிவாக ஆக்கிரமிப்பு நடப்பதாக அம்பலப்படுத்துகின்றனர்..

ஆசிரியர் - Editor I

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு குருந்துார் மலைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் நோில் சென்றுள்ளனர். 

இதன்போது அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாமல் தடுத்தனர்.இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, 

தொல்லியல் திணைக்களபணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி இராணுவம் குருந்தூர்மலைக்குச் செல்ல தடைவிதிக்கின்றமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் அங்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்டதொல்பொருள் திணைக்களத்தினர் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை குருந்தூர் மலைப் பகுதிக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் 

அங்கு இடம்பெறுகின்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் மற்றும், அங்கு நீதிமன்ற கட்களைகளுக்கு மாறாக இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், அங்கு ஆதிஐயனார், ஆதிசிவன் இருந்த இத்தில் வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு