SuperTopAds

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களது குடும்பங்களின் சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்த திட்டம்..! அங்கஜன் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களது குடும்பங்களின் சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்த திட்டம்..! அங்கஜன் எச்சரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் குடும்பத்தினருக்கு சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். 

யாழ்.பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெற்றிருந்தது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் 

சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் குடும்பங்களில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதாக யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். பொம்மை வெளிப் பகுதிகளில் அதிகளவிலான 

போதை வியாபாரம் இடம்பெறுவதாகவும் பாடசாலை செல்லும் வயதுடையோர் குறித்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவித்தார். போதைப்பொருள் பாவனை தொடர்பில் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவித்தல் விடுக்கும்போது 

தாம் வழங்கும் தகவல்கள் சட்டவிரோத குழுக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பொலிஸார் குறித்த இடங்களுக்கு வரும் போது குறித்த சட்டவிரோத செயற்பாட்டாளர்கள் குறித்த இடத்திலிருந்து முன்னரே தப்பித்துக் கொள்ளும் நிலையில் 

பொலிஸார் இவர்களுக்கு தகவல்களை வழங்குகிறார்களா? என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் 

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் யாழ்ப்பான பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு காவலர்களை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியதுடன் குறித்த செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களின் குடும்பங்கள் திருந்துவதற்காக 

சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.