ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் கூட்டத்தொடரில் என்ன செய்வது..! மய்டையை பிய்த்துக்கொள்ளும் அரசு, ஜனாதிபதி தலமையில் இன்று அவசர கலந்துரையாடல்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனவும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கலாம். எனவும் எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டத்தொடரில் என்ன நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது என்பது குறித்து ஜனாதிபதி தலமையில் இன்று விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இராஜங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, செயலாளர் ரியர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மற்றும், ஜனாதிபதியின் வெளிவிவகாரங்களுக்கான ஆலோசகர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டமானது மெய்நிகர் வழியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகவிருக்கும் சி.ஏ.சந்திரப்பெருமவும் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கான இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் தூதுவர்களும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்திற்கான பிரேரணை பிரித்தானியா, கனடா உள்ளிட்ட இணை அனுசரண நாடுகளால் இம்முறை கொண்டுவரவுள்ளதோடு இந்தப் பிரேரணைக்கான இணை அனுசரணையை இலங்கை அரசாங்கத்தினையும் வழங்குமாறும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கோரியபோதும்
அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதை நிராகரித்தமையை வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் ரியர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.