வயோதிபரை நிர்வாணமாக்கி, மிளகாய் சாற்றை கண்ணில் விட்டு, ஆணுடம்பில் ஊற்றி பொலிஸார் அட்டூழியம்..!
முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் நிலையத்தில் தன்னை நிர்வாணமாக்கி கண்களுக்குள் மிளகாய் சாறு ஊற்றி பொலிஸார் அடித்து துன்புறுத்தியதாக இராமச்சந்திரன் என்ற 60 வயதான நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் தொியவருவதாவது, கடந்த 15-01-2021 கோட்டைக்கட்டியகுளம் பகுதியில் வயலுக்கு சென்ற சமயம் தகவல்கள்கட்டுத்துவக்கு வெடிப்பு சம்பவத்தில் சிங்கராஜா சுஜீவன் எனும் குடும்பஸ்தர் படுகாயமுற, அவருடன் வயலுக்கு சென்ற ராமச்சந்திரன் (வயது-60) எனும் நபர்
படுகாயமுற்ற குடும்பஸ்தரின் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கிவிட்டு படுகாயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டு வீட்டில் தங்கியிருந்த வேளை, அன்று இரவே 8 மணியளவில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்ட்டுக்கு சென்ற மல்லாவி பொலிஸார்
குறித்த நபரை விசாரணைக்கென மல்லாவி போலீஸ் நிலையத்திற்க்கு ஏற்றி சென்று அடைதுள்ளனர். சித்திரவதைகள் பின்னர் குறித்தநபரை நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் நீதவான் இவருக்கு பிணை வழங்கியுள்ளார் .பொலிஸ் சித்திரவதைகளின் பின்னர்
இவரின் மனைவி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற சம்பவங்களை இவ்வாறு விபரிக்கின்றார் ராமச்சந்திரன்
காவல் நிலைய சிறைக்கூடத்தில் நான் தூங்கிக்கொண்டு இருந்த வேளை இரவு 10 மணியளவில் என் சிறைக்கூடாரத்திற்கு வந்த போலீஸ் காவலர் என்னை வெளியில் வருமாறு அழைத்தார். பின்னர் ஒரு அறை ஒன்றுக்குள் என்னை அழைத்து சென்றனர்,
அதற்குள் ஏற்கனவே 7,8 போலீஸ் காவலர்கள் இருந்தனர்.அவர்களுடன் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியும் அமர்ந்திருந்தார்என்னை உட்காருமாறு கூறிவிட்டு நீதானே கட்டுதத்துவக்கு வைத்தனி என்று எனது இடுப்பு பகுதியில் ஒரு கொட்டனால் அடித்தார் ஒரு பொலிஸ்.
அதன் பிற்பாடு மிக்சி( அரைக்கும் இயந்திரப்பொறி) ஒன்றுக்குள் கொச்சி மிளகாய் அரைத்துக்கொண்டிருந்தது என்னை மீண்டும் தூக்கி நிறுத்தி விட்டு என் கண்ணுக்குள் அரைத்த மிளகாய் சாற்றை விட்டனர். இரவு ஒருமணியளவில் மீண்டும் என் கண்ணுக்குள் மிளகாய் சாறு விட்டனர்.
பின்னர் என்னை முழு நிர்வாணம் ஆக்கிவிட்டு என் ஆணுடம்பு எங்கேனும் கொச்சி மிளகாய் சாறு தடவினர் அதன் பிற்பாடு எனக்கு என்ன நடந்த என்று தெரியாது. என் முதுகு மற்றும் பின் பகுதிகள் எங்கும் கண்டல் காயங்கள் பின்னரே என்னை நீதவான் முன்னிலையில் பாரப்படுத்தினர்,
அங்கு கூட என்னை கதைக்கவோ எனக்கு அடித்தார்கள் என்ற விடயத்தையோ தெரிவிக்கவோ பொலிஸார் அனுமதிக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.