தமிழர் தாயகத்தில் அதிகரிக்கும் தமிழர் வாழ்வுரிமையை அழிக்கும் செயற்பாடுகள்..! அவசரமாக கூடியுள்ள சர்வகட்சி தலைவர்கள்..

ஆசிரியர் - Editor I

வடகிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள வாழ்வுரிமையை மறுக்கும் செயற்பாடுகளை கண்டித்து தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் சர்வகட்சிகள் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்

இந்தக் கலந்துரையாடல் இன்று முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் 

ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும்.

வடகிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக 

செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

நாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

Radio