யாழ்.கொக்குவில் பகுதியை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.நகரம், திருநெல்வேலி பகுதிகளில் நடமாடியதால் சுகாதார பிரிவு உஷார்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பு சென்றிருந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர் யாழ்.நகரப்பகுதி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் நடமாடியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், அந்த இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்ற ஒருவர் கடந்த ஓராண்டாக கொக்குவிலில் தனது வீட்டில் தங்கியிருந்தார்.

60 வயதான அவர் தற்போது மீண்டும் பிரான்ஸ் செல்வதற்காக தனியான வாகனத்தில் மேலும் சிலருடன் கொழும்பு சென்றுள்ளார்.

வெளிநாடு செல்வதற்கு பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை அவசியம் என்பதால் அவர் கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையில்

பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது. அதில் அவருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது கொழும்பில் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதி, திருநெல்வேலி சந்தை ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளார் என்று தெரியவருகின்றது.

அவர் சென்று வந்த இடங்களை அடையாளப்படுத்தி, அந்த இடங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

Radio