யாழ்.வல்வெட்டித்துறையில் விளையாட்டு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு..! இராணுவத்தினால் 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I

யாழ்.வல்வெட்டித்துறையில் உள்ள வீடு ஒன்றில் விளையாட்டு கார் ஒன்றில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தாதாகச் சந்தேகிக்கப்படும் மூவரை இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் போதைப் பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக இராணுவத்துக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டு தேடுதல் இடம்பெற்றது.

தேடுதலின் போது சிறு பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு கார் ஒன்றின் உட்பாகத்தில் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன்  சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio