இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பரீட்சார்த்த நடவடிக்கை இன்று ஆரம்பம்..! 3 தடுப்பூசி வழங்கும் நிலையங்களும் அமைப்பு..
இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் பரீட்சார்த்த நடவடிக்கை இன்று நடைபெறவுள்ளது.
பிலியந்தலை பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட மூன்று இடங்களில் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்தியாவிடமிருந்து தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக
ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பிலான மேலதிக தௌிவுபடுத்தலை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா,
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரியுள்ளதாக , சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி , அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆதிக்கத்தை பின்தள்ளி, வலய நாடுகளின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதற்காக அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்
இந்தியாவின் தடுப்பூசி கொள்கை காணப்படுவதாக Al-jazeera செய்தி வௌியிட்டுள்ளது.
எதிர்வரும் சில வாரங்களில் மில்லியன் கணக்கான COVID-19 தடுப்பூசிகளை தெற்காசிய நாடுகளுக்கு விநியோகிக்க இந்தியா தயாராகியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.