இந்திய இழுவைபடகு மூழ்கி 4 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்தியா அதிருப்தி..! கண்டனங்களையும் தொிவித்திருக்கின்றது..
இலங்கை கடற்படை படகுடன் மோதி இந்திய இழுவை படகு மூழ்கிய 4 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் கண்டனம் தொிவித்துள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து அந்த நாட்டு வௌியுறவுத்துறை அமைச்சர் தமது அதிருப்தியை வௌியிட்டுள்ளதாக இந்திய ஊடகஙக்ள கூறுகின்றன,
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்க வருகை தந்த படகுகளையும், மீனவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள்
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது, இலங்கை கடற்படையிடமிருந்து தப்பிக்கும் நோக்குடன், இந்திய மீனவர்கள் தமது படகுகளை செலுத்த முயற்சித்துள்ளனர்.
கடற்படையின் படகுகளை சேதப்படுத்தி தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில், குறித்த இந்திய மீனவர் படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பெறாவண்ணம் இலங்கை கவனமாக இருக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது,