சுகாதார நடைமுறைகளும், சட்டமும் ஒரு சிலருக்கு மட்டுமா..? தட்டிக்கேட்பது யார்..?

ஆசிரியர் - Editor I

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது ஆனால் சில அரச துறைசார்ந்தவர்கள் தங்கள் தேவகைளுக்காக பயன்படுத்துகிறார்கள் என தொழிலதிபர் வெற்றிவேலு யஜந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் 19 காரணம் காட்டி சில அரச துறை சார்ந்தவர்கள் நடந்துகொள்ளும் விதம் சரியானதா சட்டம் எல்லோருக்கும் பொதுவானதே அவ்வாறு உள்ள நிலையில் 

எதற்காக ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் அதனை மாற்றியமைத்து அப்பாவி மக்களை துன்புறுத்துகின்றார்கள்.

கொவிட் 19 மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக தன்னார்வலர்களை அரச துறை சார்ந்தவர்கள் நியமனம் செய்கிறார்கள் அவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்கள் 

தாம் என்ன கடமை செய்யவேண்டும் என்பது தொடர்பில் முறையாக பயிற்றுவிக்கப்படுகின்றார்களா தண்ணீருக்குள் வீடு இருக்கும் நி லையில் அங்கு வந்து 

தண்ணீர் தேங்கி நிற்கின்றது எனக்கூறி தண்டம் அறவிடும் நிலைமையும் அல்லது சட்ட நடவடிக்க்கைகுட்படுத்தும் நிலையும் காணப்படுகின்றது.

முதலில் குறித்த வீடு அல்லது கிராமம் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை அவதானிக்கவேண்டும். அது மட்டுமன்றி குறித்த பகுதிக்கு வருபவர்கள் அவர்கள் 

எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது தொடர்பில் தெளிவுபடுத்தல்கள் தேவை அது இதேபோல கொவிட் 19 நடைமுறை என்பது பொது மக்களை பாதுகாப்பதற்காககத்தான் 

ஆனால் அதே நடைமுறையைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்துகின்ற வகையில் நடக்கக்கூடாது யாராக இருந்தாலும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் வசதி படைத்தவர்கள் பணம் படைத்தவர்கள் என்பதற்காக 

அவர்களுக்கு அந்த நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது ஒரு சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொழும்பில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தப்படுத்தவேண்டும் 

என தொலைபேசியில் எடுத்துக்கூறினால் அவர்கள் அதை செய்வதாக கூறி உரிய தனிமைப்படுத்தல் முறை இல்லாது வெளியில் நடமாடக்கூடிய வகையில் அவர்களை அனுமதிக்கின்றார்கள். 

ஏன் இந்த வேற்றுமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளை இத்தகைய துறையில் உள்ளவர்கள் ஈடுபட்டால் எவ்வாறு எங்கள் பிரதேசத்தை காப்பாற்றமுடியும் நாம் இத்தகைய குற்றச்சாட்டுக்களை கூறுகின்றபோது 

என்னிடம் இதற்கான ஆதாரங்களும் உள்ளது மக்களுக்கு சேவை செய்வதற்காக சென்று உங்கள் தேவைகளை நிறைவேற்றாதீர்கள். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது அதற்கேற்றவகையில் எல்லோரும் செயற்படவேண்டும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு