இனப்படுகொலை என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்த கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகியோர் மறுத்தனர்..! சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறுகின்றார்..

ஆசிரியர் - Editor I

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் முதலில் ஏற்கமறுத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளால் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா அமர்வில் சமர்ப்பிப்பதற்கான வரைபு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இவ் அறிக்கை தயாரிப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி வி விக்னேஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதியரசர் விக்னேஸ்வரன் சார்பில் கலாநிதி சர்வேஸ்வரன் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவேளை 

இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டுமென சர்வேஸ்வரன் தெரிவித்தார். ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாம் முன்பு கதைத்த விடயங்களைப்பற்றியே கதைக்கப்போகிறோம் 

குறித்த விடயம் அதில் அடங்கவில்லை என கூட்டத்தில் பங்குபற்றிய தரப்பால் சர்வேஸ்வரனுக்குச் சொல்லப்பட்டது.இவ்வாறு சொல்லப்பட்ட நிலையில் சர்வேஸ்வரன் தாம் இதில் கலந்து கொள்வது தமக்கு வழங்கப்பட்ட கடமையை சரிவர நிறைவேற்ற முடியாது எனத் தெரிவித்து 

அதிலிருந்து விளக்கிக் கொண்டார்.இவ்வாறான நிலையில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் சந்திப்பில் குறித்த வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இதன்போது எம் கே சிவாஜிலிங்கம் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்ற வாசகம் 

ஏன் அதில் இடம்பெறவில்லை என என்னுடன் இணைந்து கேள்விகளை தொடுத்திருந்தார்.அதன்போது பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவ்வாறான வாசகம் இடம் பெற வேண்டும் என்றால் அதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என ஆங்கிலத்தில் தெரிவிக்க 

சுமந்திரனும் தனக்கு உடன்பாடு இல்லாத நிலையிலும் ஏற்கிறேன் என தெரிவித்தாதாக அவர் மேலும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு