கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளுக்கு அனுப்பும் தனியார் வைத்தியசாலைகள்..! இராணுவ தளபதி கடும் ஆட்சேபனை..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை வீடு திரும்புவதற்கு தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

அன்டிஜென் பிசிஆர்சோதனைக்கு என வருபவர்களை பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை மருத்துவமனையிலேயே வைத்திருக்க வேண்டும். 

என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 

தொடர்பில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்த தகவல்களை 

சுகாதார அதிகாரிகளிற்கு அறிவிக்காமல் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஆபத்தான விதத்தில் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்டிஜென் பிசிஆர் சோதனைக்ளுக்காக அதிக பணத்தினை தனியார் ஆய்வுகூடங்கள் அறவிடுகின்றன என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு