யாழ்.புத்துார் - நிலாவரை கிணற்றின் அருகில் தொல்லியல் திணைக்களம் திடீரென நிலத்தை அகழ்ந்து ஆராய்ச்சி..! பிரதேசத்தில் பரபரப்பு..
யாழ்.புத்துார் - நிலாவரை கிணற்றின் அருகில் தொல்பொருள் திணைக்களத்தினால் திடீரென அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ், அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.
இங்கு புராதனக் கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும்
அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.