பொலிஸார், தாதியர், வைத்தியசாலை ஊழியர்கள் அடங்கலாக மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! முடக்கப்படும் நிலையில் மன்னார்..

ஆசிரியர் - Editor I
பொலிஸார், தாதியர், வைத்தியசாலை ஊழியர்கள் அடங்கலாக மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! முடக்கப்படும் நிலையில் மன்னார்..

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இன்று நடத்தப்பட்ட 708 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்கின்றது. என கூறயுள்ளார். இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறுகையில், மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் 2 தாதியர்கள் 

மற்றும் 2 உழியர்கள், மன்னார் வைத்தியசாலையில் பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் உள்ளடங்கலாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்துள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தனர் என்ற அடிப்படையில் 

சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலை மருத்துவ விடுதியில் கொவிட் -19 நோயாளிகள் இருவர் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் 

அந்த விடுதியில் பணியாற்றிய மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என சுயதனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறிப்பட்டது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும் சுகாதார ஊழியர்கள் இருவரும் என நால்வர் சுயதனிமைப்படுத்தபட்டிருந்தனர். அவர்கள் நால்வருக்கும் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு