SuperTopAds

வடமாகாணத்திற்குள் நுழைந்த 20 பேருக்கு நேற்றும் தொற்று, மாகாணத்திற்குள் நுழைவோருக்கு PCR பரிசோதனை நடத்த அனுமதிகோரி ஆளுநருக்கு அவசர கடிதம்..!

ஆசிரியர் - Editor I

வடக்கு மாகாணத்திற்குள் நுழையும் சகலருக்கும் வவுனியா மாவட்ட எல்லையில் PCR பரிசோதனை நடத்த அனுமதிக்குமாறுகோரி மாவட்ட செயலர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேவேளை நேற்றய தினமும் வவுனியாவுக்குள் நுழைந்த 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை நேற்றுடன் 222 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் அதிக நோயாளர்கள் தொடர்ச்சியாக இனம் காணப்பட்டாலும் 

மாவட்டத்தில் கொரோனா பரவிலிற்கு காரணமாக காணப்பட்டது. பிறமாவட்டங்களான மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட மாவட்ட வர்த்தகர்களின் வருகையே இருந்துள்ளது.

இவற்றின் அடிப்படையில் தெற்கில் இருந்து வவுனியாவிற்கு வருகை தரும் அனைவரையும் ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதியினையும் அவற்றிற்கான ஏற்பாட்டினையும் செய்து தருமாறுகோரியே மாவட்ட அரச அதிபர் கடிதம் எழுதியுள்ளார்.

இதன் மூலம் வவுனியா மாவட்டத்திற்குள் உள் நுழையும் அனைவருக்கும் அன்டியன் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் உச்ச பட்சமாக 20 நிமிடங்களில் பெறுபேற்றைப் பெற்று பயணத்தை அனுமதிப்பதற்கும் தொடரூந்தில் வருபவர்கள் தொடர்பிலும் பரிசோதனைக்கு அனுமதி கோரப்கட்டுள்ளது.