கோப்பாய் பிரதேச செயலக எல்லைக்குள் புதிய கிராம சேவகர் பிரிவுகளை உருவாக்க திட்டம்..! மக்கள் அபிப்பிராயத்துடனேயே நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்திற்குள் புதிய கிராமசேவகர் பிரிவுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கை மக்கள் அபிப்பிராயங்களின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுவதாக பிரதேச செயலர் திருமதி சுபாஷினி மதியழகன் கூறியுள்ளார். 

கடந்த சனிக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடல் சிவில் அமைப்புப் பிரதிநிதி ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குகே அவர் இவ்வாறு பதில் அளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோப்பாய் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் கிராம சேவையாளர் பிரிவுகளை அதிகரிக்கா விட்டால் பிரதேச செயலகத்தை இரண்டாக்க முடியாது. அதற்காக பொதுமக்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளும் வகையில் 

பிரதேச ரீதியாக ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகள் பொதுமக்களின் அபிப்பிராயங்களை அறிவதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் சில கிராம சேவையாளர் பிரிவுகள் பிரிப்பதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் 

சில கிராம சேவையாளர் பிரிவுகள் விருப்பம் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. ஆகவே தற்போது இடம்பெற்றுவரும் விடையம்மக்களுக்காக மக்கள் தமது விருப்பங்களை தெரிவிக்கும் முடியுமே தவிர இறுதி முடிவு அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு